ஒருபானைச் சோற்றுக்கு
ஒருசோறு பதம்.
இங்கேபானை இருக்கிறது
சோற்றைத்தான் காணோம்...
கதிரவன் விழிக்கும்முன்னே
காத்திருந்து கண்விழித்து
எஜமானி வீடுசென்று
வீடெல்லாம் கழுவிவிட்டு
பத்துப் பாத்திரங்கள்
துலக்கித் துணிதுவைத்து
எஜமானி முன்நின்று
முறையிட்டு கடன்பெற்ற
இருபது ரூபாய்கள்
இரு பத்து ரூபாய்கள்
ஒருகிலோ ஒருரூபாய்
ஒருகிலோ ஒருரூபாய்
ஒருமாதச் சோற்றுக்கு
ஓடினாள் ரேசன்கடை
அரிசியோ தீர்ந்துபோச்சாம்
அரிசியோ தீர்ந்துபோச்சாம்
கடைக்காரன் சொன்னகதை
கடைக்காரன் சொன்னகதை
இதுதான் இங்குநிலை
ஏழைகள் வாழும்நிலை
ஒருபானை சோற்றுக்கு
ஒருசோறு பதம்...
உண்மை...